ஊர் வம்பு
Dear Readers,

Welcome to Oor Vambu forum.

Please register yourself in this forum in order to post new messages or reply to messages.

But registration is not required for just reading the contents.

Thanks,
Admin
ஊர் வம்பு
Dear Readers,

Welcome to Oor Vambu forum.

Please register yourself in this forum in order to post new messages or reply to messages.

But registration is not required for just reading the contents.

Thanks,
Admin
ஊர் வம்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஊர் வம்பு

General, useful topics to discuss
 
HomeLatest imagesSearchRegisterLog in

 

 கொழு கொழு கன்றே....

Go down 
2 posters
AuthorMessage
bkar81
Admin
bkar81


Posts : 138
Join date : 2012-02-15
Location : Chennai, India

கொழு கொழு கன்றே.... Empty
PostSubject: கொழு கொழு கன்றே....   கொழு கொழு கன்றே.... I_icon_minitimeThu Feb 16, 2012 1:17 pm

குழந்தைகள் சலிப்புடன் இருக்கிறார்களா? அவர்களுக்கு உணவூட்ட வேண்டுமா? தூங்க மறுக்கிறார்களா? கதை சொல்ல வேண்டுமா?

அப்போ இதோ இருக்கு ஒன்னு, அவுத்து விடுங்க....

ஒரு நாள் ஒரு ஈ, ஸ்வைன்னு பறந்து போச்சான்... அப்ப போற வழில அது ஒரு கல் தடுக்கி கீழ விழுந்துதான்...விழுந்ததுல தன்னோட பேரு என்னனு மறந்து போச்சான் அதுக்கு. என்னடா பன்றதுன்னு ஒரே கவல(கவலை) அதுக்கு. சரி, இங்க இருக்கரவா யார் கிட்டயாவது போய் கேட்டு பாகலான்னு போச்சான்.

அங்க ஒரு கொழுக்கு முழுக்குன்னு ஒரு அழகான கன்னுக்குட்டி(கன்று) இருந்துதான். அது கிட்ட போய் - கொழு கொழு கன்றே என் பேர் என்னனு கேட்டுதான். அதுக்கு அந்த கன்னுக்குட்டி, எனக்கு தெரியாது என்னோட அம்மா கிட்ட போய் கேளுன்னு சொல்லித்தான்.

கன்னுக்குட்டியோட அம்மா யாரு??? பசு மாடு. சரி, அப்ப கன்னுக்குட்டியோட அம்மாகிட்ட போய் கேக்கலாமேன்னு அதோட அம்மாகிட்ட போச்சான். அது கிட்ட போய் - கொழு கொழு கன்றே, கன்றின் தாயே என் பேர் என்னனு கேட்டுதான். அதுக்கு அந்த அம்மா மாடு, எனக்கு தெரியாது என்ன மேய்க்கரவ (மேய்ப்பவள்) கிட்ட போய் கேளுன்னு சொல்லித்தான்.

சரின்னு மாடு மேய்க்கரவ கிட்ட போய் - கொழு கொழு கன்றே, கன்றின் தாயே, தாய் மேய்க்கர ஆயா என் பேர் என்னனு கேட்டுதான். அதுக்கு அந்த ஆயா, எனக்கு தெரியாது என்னோட கைல (கையில்) இருக்கற கம்பு கிட்ட வேணுன்னா கேளுன்னு சொன்னாளாம்.

அப்டியான்னு, அந்த கம்பு கிட்ட போய் - கொழு கொழு கன்றே, கன்றின் தாயே, தாய் மேய்க்கர ஆயா, ஆயா கை கோலே (கோலுன்னா கம்பு) என் பேர் என்னனு கேட்டுதான். அதுக்கு அந்த கம்பு சொல்லித்தான், எனக்கு தெரியாது நான் எதுல வளந்தேனோ அதுகிட்ட போய் கேளுன்னு சொல்லித்தான்.

பாவம் அந்த ஈ, சரின்னு அந்த கம்பு வளந்த (வளர்ந்த) மரத்துக்கிட்ட போய்  - கொழு கொழு கன்றே, கன்றின் தாயே, தாய் மேய்க்கர ஆயா, ஆயா கை கோலே, கோல் வளரும் கொடி மரமே என் பேர் என்னனு கேட்டுதான்.
.
.
.
இது மாதிரி நீங்க ஒவ்வொன்னாத் தனித் தனியாச் சொல்லுங்க (இதன் முழு பாடலும் கீழே எழுதியிருக்கிறேன்...)
.
.

கொழு கொழு கன்றே, கன்றின் தாயே, தாய் மேய்க்கிர ஆயா, ஆயா கை கோலே, கோல் வளரும் கொடிமரமே, கொடி மரத்திலிருக்கும் கொக்கே, கொக்கு நீஞ்சும் குளமே, குளத்திலுள்ள மீனே, மீன் பிடிக்கிற வலையா, வலையன் கை சட்டி, சட்டி பன்ற கொசவா, கொசவன் கை மண்ணே, மண்ல வளரும் புல்லே, புல்ல திங்கும் குதிரையே என் பேர் என்னனு கேட்டுதாம்...

அதுக்கு அந்த குதுர (குதிரை), ஈ ஈ ஈ-ன்னு கனச்சுதாம்.. அப்ப தான் அந்த ஈக்குத் தன்னோட பேரு ஞாபகம் வந்துதாம்.

தன்னோட பேரு ஞாபகம் வந்த சந்தோஷத்துல ரொம்ப குஷியா வீடு போய் சேந்துதாம்....


Last edited by bkar81 on Tue Sep 23, 2014 1:34 pm; edited 2 times in total
Back to top Go down
https://oorvambu.forumotion.com
ram25683




Posts : 3
Join date : 2012-02-16
Age : 40
Location : Milford, Massachusetts, USA

கொழு கொழு கன்றே.... Empty
PostSubject: English version of the story   கொழு கொழு கன்றே.... I_icon_minitimeThu Feb 16, 2012 8:29 pm

Karthi and my other fellow cousins and relatives,

When you write stories in Tamil, can we also have an English equivalent of the same? You all probably know how good my Tamil is Wink

Thanks

TC

Ramesh
Back to top Go down
bkar81
Admin
bkar81


Posts : 138
Join date : 2012-02-15
Location : Chennai, India

கொழு கொழு கன்றே.... Empty
PostSubject: Re: கொழு கொழு கன்றே....   கொழு கொழு கன்றே.... I_icon_minitimeThu Feb 16, 2012 8:59 pm

Point noted. Wherever possible, I will do that, but for this, I doubt I can do that...
Back to top Go down
https://oorvambu.forumotion.com
ram25683




Posts : 3
Join date : 2012-02-16
Age : 40
Location : Milford, Massachusetts, USA

கொழு கொழு கன்றே.... Empty
PostSubject: Re: கொழு கொழு கன்றே....   கொழு கொழு கன்றே.... I_icon_minitimeThu Feb 16, 2012 9:57 pm

No problem Karthi..As and when possible is fine Smile
Back to top Go down
bkar81
Admin
bkar81


Posts : 138
Join date : 2012-02-15
Location : Chennai, India

கொழு கொழு கன்றே.... Empty
PostSubject: Re: கொழு கொழு கன்றே....   கொழு கொழு கன்றே.... I_icon_minitimeFri Feb 17, 2012 10:24 am

Ramesh, you want Translation or Transliteration?
Back to top Go down
https://oorvambu.forumotion.com
Sponsored content





கொழு கொழு கன்றே.... Empty
PostSubject: Re: கொழு கொழு கன்றே....   கொழு கொழு கன்றே.... I_icon_minitime

Back to top Go down
 
கொழு கொழு கன்றே....
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
ஊர் வம்பு :: பொழுதுபோக்கு / Hobbies :: Thatha Paati Kadhaigal-
Jump to: