ஊர் வம்பு
Dear Readers,

Welcome to Oor Vambu forum.

Please register yourself in this forum in order to post new messages or reply to messages.

But registration is not required for just reading the contents.

Thanks,
Admin

ஊர் வம்பு

General, useful topics to discuss
 
HomeFAQSearchRegisterLog in

Share
 

 பொதுவான யோசனைகள்

Go down 
AuthorMessage
MalaSripad

MalaSripad

Posts : 30
Join date : 2012-02-16
Age : 41
Location : Dubai

பொதுவான யோசனைகள்  Empty
PostSubject: பொதுவான யோசனைகள்    பொதுவான யோசனைகள்  I_icon_minitimeSun Apr 27, 2014 5:47 pm

* காலியான டூத் பேஸ்ட் மூடிகளின் அடிப்பக்கம் லேசாகப் பெவிகால் தடவி ஜன்னல் ஓரத்திலோ அல்லது சுவரிலோ பொருத்திவிட்டு, அதன் மீது அதிக எடை இல்லாத சாவி, பைகள் போன்றவற்றைத் தொங்க விடலாம்.
* மெழுகுவர்த்தி ஏற்றும்போது அகல் விளக்கில் நிறுத்தியபடி ஏற்றி வையுங்கள். தரையோ, ஜன்னலோ வீணாகாது.
* முகம் பார்க்கும் கண்ணாடிக்கு அருகிலுள்ள ஸ்டேண்ட் ஒன்றில் காந்தம் ஒன்றைப் பொருத்தி அதில் பின்கள், ஹேர் பின்கள் ஒட்ட வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
* பாத்திரம் தேய்க்க வாங்கும் லிக்குவிட் சோப் பிளாஸ்டிக் கண்டெயினரை (வாய்ப்பாகம் ஸ்ட்ராவுடன் கூடியது) நன்கு சுத்தப்படுத்திக் காய வைத்து எண்ணெய் நிரப்பி வைத்துக் கொண்டால், விளக்குகளுக்கு எண்ணெய் விடும்போது கீழே சிந்தி பிசுபிசுக்காது.
* வெஸ்டர்ன் டாய்லெட்டில் ஃப்ளஷ் டேங்கின் உள்ளே தண்ணீரில் மூழ்குமாறு தேய்ந்த சோப்புத் துண்டுகளைப் அடியில் துளையுள்ள சோப்புப் பெட்டியில் வைத்துக் கட்டித் தொங்கவிட்டால் டாய்லெட் பளிச். நறுமணமும் பாத்ரூம் முழுவதும்.
* டிவியின் மீது எக்காரணம் கொண்டும் தண்ணீர் படக்கூடாது. உள்ளே போய்விட்டால் மின்சாரம் தாக்கி பிக்சர் டியூப் வெடிக்கும் அபாயம் உண்டு.
* கொத்துமல்லி, கறிவேப்பிலை போன்றவற்றை ஓர் எவர் சில்வர் டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை புதிதாகவே இருக்கும்.
* பழைய நாலு முழ வேஷ்டியில் நாலைந்து பைகள் தைத்து வைத்துக் கொள்ளுங்கள். தானியங்களை முளை கட்ட, திரிந்த பாலை வடிய வைத்து பனீர் செய்ய, உபயோகப்படும்.
* சுண்ணாம்பில் சிறிது தேங்காய்த் தண்ணீர் விட்டு வைத்தால் இறுகிப் போகாமல் எப்போதும் இளகிய பதத்திலேயே உபயோகிக்க ஏதுவாக இருக்கும்.
* புடவைக்கு கஞ்சி போடும்போது கொடியில் உலரப் போடுவதைவிட, தரையில் விரித்துக் காய வைப்பது சிறந்தது. ஏனெனில் நாமே அயர்ன் செய்யும்போது சுலபமாக இருக்கும்.
* டிஷ்யூ பேப்பர் நாப்கின்களைப் போட்டுக் கண்ணாடிக் கதவுகளைத் துடைத்தால் பளீரென்று இருக்கும். குறிப்பாக மழை நேரங்களில் கார் ஓட்டும்போது நன்கு துடைக்க உதவும்.
* மொசைக் தரையில் கோலம் போடும்போது, அரைத்த மாவில் சிறிது பெவிகால் பசையைச் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். இதனால் பல நாட்களுக்கு அழியாமல் பளபளப்பாகவே கோலம் இருக்கும்.
* உபயோகிக்கப்படாத புதிய தபால் தலைகள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு விட்டனவா? அவற்றைச் சில நிமிடங்கள் நீங்கள் ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் சுலபமாக, கிழியாமல் பிரிக்க முடியும்
Back to top Go down
bkar81
Admin
bkar81

Posts : 138
Join date : 2012-02-15
Location : Chennai, India

பொதுவான யோசனைகள்  Empty
PostSubject: Re: பொதுவான யோசனைகள்    பொதுவான யோசனைகள்  I_icon_minitimeSun Apr 27, 2014 5:48 pm

Super Mala.

Thanks..

_________________
Karthi (Admin)
Back to top Go down
http://oorvambu.forumotion.com
Meera

Meera

Posts : 57
Join date : 2012-02-16

பொதுவான யோசனைகள்  Empty
PostSubject: Re: பொதுவான யோசனைகள்    பொதுவான யோசனைகள்  I_icon_minitimeFri Jun 27, 2014 10:14 pm

Nice tips dear.
Back to top Go down
Sponsored content
பொதுவான யோசனைகள்  Empty
PostSubject: Re: பொதுவான யோசனைகள்    பொதுவான யோசனைகள்  I_icon_minitime

Back to top Go down
 
பொதுவான யோசனைகள்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
ஊர் வம்பு :: பொது / General :: General Tips-
Jump to: